அரசு பள்ளி ஆசிரியர் மீது தாக்குதலுக்கு கண்டனம்

பல்லடம்,செப்.22: அவிநாசி அரசு பள்ளி ஆசிரியர் மீது தாக்குதல் சம்பவத்தை ஆசிரியர் கூட்டணி கண்டித்துள்ளது. இது குறித்து திருப்பூர் மாவட்ட தமிழக ஆசிரியர் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் செல்வம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அவிநாசி, கைகாட்டிப்புதூர் பள்ளியின் தலைமையாசிரியர் செந்தாமரைக் கண்ணனை அப்பகுதியின் நபர் ஒருவர் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் முன்னிலையில் ஆசிரியரைத் தரக் குறைவாகவும், இழிவாகவும் பேசி, கொலை வெறியுடன் தாக்குதல் நடத்திய சம்பவத்தை திருப்பூர் வருவாய் மாவட்ட தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறோம்.

இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் இருக்க ஒன்றிய, மாநில அரசுகள் ஆசிரியர்களுக்கு உரிய பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும். மேலும், ஆசிரியர் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்திய நபர் மீது கல்வித்துறை மற்றும் காவல் துறை உடன் கைது செய்து மருத்துவர்களுக்கு உள்ளது போல் ஆசிரியர்களுக்கும் பணி பாதுகாப்பு சட்டம் இயற்றி அளிக்க வேண்டும் என்று அதில் அவர் கூறியுள்ளார். 

Related Stories: