30ம் தேதி வரை நடக்கிறது கூத்தாநல்லூரில் குனுக்கடி வாய்க்கால் தூர்வாரும் பணி

மன்னார்குடி, செப். 10:  திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகராட்சி 17வது வார்டில் உள்ள குனுக்கடி வடிகால் மற்றும் பாசன வாய்க்கால் கடந்த பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்து வந்தது. மேலும் இந்த வாய்க்காலில் வெங்காய தாமரை மண்டி நிலத்தடி நீரை பாழ்ப்படுத்தி வந்தது. இது குறித்து நகர்மன்ற உறுப்பினர் பிரவீனா முத்துக்கிருஷ்ணன் மற்றும் அப்பகுதி மக்கள் நகர்மன்ற தலைவர் பாத்திமா பஷீரா கவனத்துக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து குனுக்கடி வாய்க்காலை முழுமையாக தூர்வார நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. அதன்படி பொக்லைன் இயந்திரம் உதவியுடன் குனுக்கடி வாய்க்கால் தூர்வாரும் பணி தொடங்கியது. இப்பணியை நகர்மன்ற தலைவர் பாத்திமா பஷீரா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Related Stories: