உச்சிப்புளி வட்டாரத்தில் வேளாண் விரிவாக்க மையம் திறப்பு

ராமநாதபுரம், செப்.7: வேளாண் உழவர் துறை சார்பில் உச்சிப்புளி வட்டார ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் திறப்பு விழா நடந்தது.தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதை தொடர்ந்து மண்டபம் ஊராட்சி ஒன்றிய தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம் குத்துவிளக்கேற்றினார். உச்சிப்புளி வட்டார விவசாயிகளுக்குபாரம்பரிய நெல் ரகம், அறுபதாம் குறுவை நெல் விதைகள், திரவ உயிர் உரம் உள்ளிட்ட வேளாண் இடுபொருட்களை வேளாண் உதவி இயக்குநர் ஷேக் அப்துல்லா, உச்சிப்புளி வட்டார வேளாண்உதவி இயக்குநர் அமர்வால் ஆகியோர் வழங்கினர். வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் நாகராஜன், ஊராட்சி தலைவர்கள் கார்மேகம், காமில் உசேன், ராணி கணேசன், முஹமது அலி ஜின்னா, நாகேஸ்வரி வீரபத்திரன், பரமேஸ்வரி பத்மநாபன், கோகிலவாணி, மீரான் ஒலி, சந்திரசேகர், துணை வேளாண் அலுவலர்கள் பாண்டியன், சையது முஸ்தபா, வேளாண் அலுவலர் சவுமியா, ஜெயமணி, உதவி வேளாண் அலுவலர் ஜெயக்குடி, வட்டார தொழில் நுட்ப மேலாளர்கள் பானுமதி, ரெங்கநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: