நிகர பூஜ்ஜிய கார்பன் கிளஸ்டர்ஸ் சான்றிதழ் பெறுவதற்கான கருத்தரங்கம்

திருப்பூர், ஆக. 10:  நிப்ட்-டீ கல்லூரியில் ஆராய்ச்சி மற்றும் இன்குபேஷன் மையத்தில் நிகர பூஜ்ஜிய கார்பன் கிளஸ்டர்ஸ்  சான்றிதழ் திருப்பூருக்கு மத்திய அரசிடம் இருந்து பெறுவதற்கு, தொழில்நுட்ப தகவல் முன்னறிவிப்பு மற்றும் மதிப்பீட்டு கவுன்சிலுடன் இணைந்து தரவு மதிப்பீடு மற்றும் கணக்கெடுப்பு பெறுவதற்கான விழிப்புணர்வு மற்றும் கல்லூரி மாணவர்களின்  பங்களிப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக  ஆராய்ச்சி ஆய்வாளர்கள் தீபக்குமார் மற்றும் மணீஷ் குமார் ஆகியோர் கலந்துகொண்டு திட்டத்தின் முக்கியத்துவத்தை குறித்து விளக்க பேசினர். கல்லூரியின் முதல்வர் பாலகிருஷ்ணன் வரவேற்று பேசினார். இதில் ஆராய்ச்சி மற்றும் தொழில் நுட்ப துறை தலைவர் அருள் செல்வன் பேசும் போது, நிப்ட்-டீ கல்லூரி கடந்த10 ஆண்டுகளில் உடன் இணைந்து இவ்வாறு புதிய முயற்சிகளை செய்து வருகிறது.  தற்பொழுது திருப்பூர் கிளஸ்டர் நிகர பூஜ்ஜிய கார்பன் கிளஸ்டர்ஸ் என்ற சான்று மத்திய அரசிடமிருந்து  பெறுவதற்க்காக தரவுகள் கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதற்க்கு மாணவர்களின் பங்களிப்பின் முக்கியத்துவம், அதன் மூலம் மாணவர்கள் பெறும் நன்மைகள் ஆகியவற்றை எடுத்துக் கூறினார் .

இன்குபேசன் மைய மேலாளர் செந்தில்குமார் கிளஸ்டர் பெறும் நன்மைகள் பற்றி விளக்கினார்.  திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் மற்றும் கல்லூரியின் முதன்மை வழிகாட்டி ராஜா சண்முகம் பேசும் போது, கடந்த 10 ஆண்டுகளில் புதிய தொழில் நுட்ப மாற்றங்கள் மூலம் திருப்பூர் கிளஸ்டர் ஆனது. கார்பன் வெளியிடும் தன்மை மற்றும் அதற்கு ஈடான பசுமை ஆற்றல் உருவாக்கம் மற்றும் கழிவு  மறுசுழற்சி  காரணமாக இவ்விரண்டும் சமமாக உள்ள காரணத்தால் நமது கிளஸ்டர் நிகர பூஜ்ஜிய கார்பன் வெளியிடும் கிளஸ்டர் என   அறிவிக்க  கோரிக்கை வைத்தோம். அதை ஏற்று  ஆராய்ச்சியாளர் குழு தரவுகள் கணக்கெடுப்புக்காக திருப்பூர் வந்துள்ளனர். இவர்கள் மூன்று முதல் ஆறு மாத காலம் நமது  நிப்ட்-டீ கல்லூரியின் ஆராய்ச்சித் துறையுடன் இணைந்து மாணவர்களின் பங்களிப்பின் மூலம் தரவுகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளது.  இதன் மூலம் திருப்பூர் கிளஸ்டர் முதல் நிகர பூஜ்ஜிய கார்பன் கிளஸ்டர்ஸ் என்ற சான்றிதழ் பெற ஏதுவாக இருக்கும்,  என்றார்.

Related Stories: