நான்கு வழி சாலைக்காக அகலப்படுத்தும் பணி கஞ்சா விற்ற பெண் உட்பட 3 பேர் கைது

ஈரோடு, ஆக.10: ஈரோட்டில் கஞ்சா விற்ற பெண் உட்பட 3 பேர் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 5.50 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர். ஈரோடு கொல்லம்பாளையம் பார்வதி கிருஷ்ணா வீதியில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்களை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் கவிதா லட்சுமி, எஸ்ஐ மோகனசுந்தரம் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, செல்வி (48) என்பவர் வீட்டில் போலீசார் அதிரடியாக நுழைந்து சோதனை செய்தபோது, அவரது வீட்டில் 3.50 கிலோ கஞ்சா பொட்டலங்களை விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து மதுவிலக்கு போலீசார், செல்வியை பிடித்து, ஈரோடு தெற்கு போலீசில் ஒப்படைத்தனர். இதைதொடர்ந்து போலீசார் செல்வியை கைது செய்து, அவரிடம் இருந்த 3.50 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதேபோல், பெருந்துறை ஜேஜே நகர் பகுதியில் கஞ்சா விற்றதாக பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியை சேர்ந்த ராஜா (38) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த 80 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில், பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதாபேகம் தலைமையில் எஸ்ஐ செந்தில்குமார், எஸ்எஸ்ஐ கருப்புசாமி, பிரகாஷ் ஆகியோர் பெருந்துறை-ஈரோடு சாலையில் முருகன் தியேட்டர் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த கவுந்தப்பாடியை சேர்ந்த அப்துல் ரகுமான் (44) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த 2 கிலோ கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories: