4 மெசின், துணிகள் எரிந்து சாம்பல்

வெள்ளகோவில், ஆக. 9: வெள்ளகோவில் அருகே டெய்லர் கடை திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வெள்ளகோவில் அருகே உள்ள ஓலப்பாளையம் கடைவீதி பகுதியில், கண்ணுசாமி (48)என்பவர் டெய்லர் கடை வைத்துள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார்.

நள்ளிரவு கடையில் இருந்து கரும்புகை கிளம்பியது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்தனர். எனினும் 4 தையல் மெசின், துணிகள் எரிந்து சாம்பலாகியது. இது குறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.

Related Stories: