லாரி டிரைவரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு

விருத்தாசலம், ஆக. 2:  விருத்தாசலம் அருகே உள்ள கவணை கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் வெங்கடேசன் (36). இவர் கோட்டேரி கிராமத்தை சேர்ந்த பரமகுரு என்பவரிம் லாரி டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கோபுராபுரம் கிராமத்தைச் சேர்ந்த சிவகண்டன் என்பவரிடம் டிரைவர் வேலைக்கு சேர்ந்துள்ளார். இதன்காரணமாக, பரமகுரு மற்றும் அவரது ஆதரவாளரான சின்னபண்டாரங்குப்பம் கிராமத்தைச்

சேர்ந்த சிவா ஆகியோர் சேர்ந்து நேற்று முன்தினம் வெங்கடேசனை அசிங்கமாக திட்டி தாக்கி, கொலைமிரட்டல் விடுத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார், பரமகுரு மற்றும் சிவா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: