மணல் அள்ளிய 3 மாட்டு வண்டிகள் பறிமுதல்

விருத்தாசலம், ஆக. 2:விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் மற்றும் போலீசார் ராமச்சந்திரன்பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். ராமச்சந்திரன் பேட்டை மணிமுக்தாற்றில் அனுமதியின்றி திருட்டுத்தனமாக மாட்டு வண்டியில் மணல் அள்ளி கொண்டு சென்ற மூன்று மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீசார் வருவதை அறிந்து தப்பி ஓடிய மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களான மணலூர் குணசேகரன்(45), ராமச்சந்திரன்பேட்டையை சேர்ந்த சுரேஷ், (40), எருமனூர் முத்துவேல்(28) ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories: