திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம்

வேப்பூர், ஜூலை 30: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலில் திராவிட இயக்க வரலாற்றை இளைய தலைமுறையினரிடம் கொண்டு செல்லும் நோக்கில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் சிறப்பான முன்னெடுப்பில் திமுக இளைஞரணி சார்பில் தமிழகம் முழுவதும் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. கடலூர் மேற்கு மாவட்ட திமுக திட்டக்குடி சட்டமன்ற தொகுதிக்கான இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் வேப்பூர் அடுத்த கழுதூர் தனியார் கல்லூரியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சரும், கடலூர் மேற்கு மாவட்ட திமுக செயலாளருமான சி.வெ.கணேசன் தலைமையில் நடைபெற்றது.

இதில், திராவிட இயக்க வரலாறு என்கிற தலைப்பில் நீதிக்கட்சி வரலாறு, திமுக வரலாறு, சமூக நீதி பெரியார், அண்ணா, கலைஞர், மு.க.ஸ்டாலின் குறித்த கருத்துரைகளை மதிமாறன் வழங்கினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் பெரியார், அண்ணா, கலைஞரின் முகமாக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார் என கூறினார்.

தொடர்ந்து பேராசிரியர் ஜெயரஞ்சன், மாநில சுயாட்சி என்கிற தலைப்பில் பேசினார். சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் இமையம், ஒன்றிய செயலாளர்கள் சின்னசாமி, செங்குட்டுவன், அமிர்தலிங்கம், நகர செயலாளர் பரமகுரு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கருப்புசாமி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் கணேஷ்குமார், பாண்டுரங்கன், ராஜேஷ்குமார், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள் தங்க நாராயணசாமி, சங்கர், நகர‌ இளைஞரணி அமைப்பாளர் சேதுராமன் உள்பட இளைஞரணியினர் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: