குறை தீர் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

கிருஷ்ணகிரி, ஜூன் 14: கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில், வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில் நேற்று நடந்தது. இதில், உதவித்தொகைகள், சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 214 மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர், தகுதியான மனுக்களுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். முன்னதாக, கலெக்டர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு மாநில தலைமை மீன்வள கூட்டுறவு இணையத்தின் மூலம் 2020-21ம் ஆண்டு பிரதான் மந்திரி மட்சய சம்படா யோஜனா திட்டத்தின் கீழ், நாகனூர் மீனவர் கூட்டுறவு சங்கத்தை சார்ந்த உறுப்பினர் கோவிந்தன் என்பவருக்கு, 40 சதவிகித மானியத்தொகையுடன் கூடிய ₹73,721 மதிப்பிலான மொபட் மற்றும் 70 லிட்டர் கொள்ளளவு உள்ள குளிர்காப்பு பெட்டி ஆகியவற்றை கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில், டிஆர்ஓ ராஜேஸ்வரி, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பாக்கியலட்சுமி, உதவி ஆணையர் (கலால்) பாலகுரு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் ரத்தினம் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: