நாளை மின்தடை

ராஜபாளையம், ஜூன் 9: ராஜபாளையம் கோட்டத்தில் உள்ள ஆலங்குளம் உப நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் ஆலங்குளம், ஆலங்குளம் முக்கு ரோடு, முத்துசாமிபுரம், கங்கர் செவல், குண்டாயிருப்பு, எதிர்க்கோட்டை, உப்புபட்டி, கல்லமநாயக்கர்பட்டி, கொங்கங்குளம், காக்கிவாடன்பட்டி, நதிக்குடி, மம்சாபுரம், கரிசல்குளம், கொம்பன்குளம், சிவலிங்கபுரம், நரிக்குளம், அருணாச்சலபுரம், மேலாண்மறைநாடு, செல்லம்பட்டி, கோட்டைப்பட்டி, கொருக்கலம்பட்டி ஆகிய இடங்களில் மின் விநியோகம் மின் தடைப்படும். இத்தகவலை ராஜபாளையம் மின் பகிர்மான செயற்பொறியாளர் திருநாவுக்கரசு தெரிவித்தார்.

Related Stories: