சிலம்பு ரயிலை தினமும் இயக்க கோரிக்கை

ராஜபாளையம், ஜூன் 8: ராஜபாளையம் வழியாக சிலம்பு அதிவிரைவு ரயிலை வாரத்தில் மூன்று நாட்கள் வியாழன் மற்றும் சனி, ஞாயிறு கிழமைகளில் செங்கோட்டையில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலை தினசரி இயக்க மதுரை ரயில்வே கோட்ட கலந்தாய்வுக் குழு உறுப்பினர்(தென்காசி எம்.பி நியமனம்), உச்சநீதிமன்ற வழக்குரைஞர் டாக்டர் ராம் சங்கர் நேற்று டில்லியில் உள்ள இந்திய ரயில்வே அமைச்சக தலைமை அலுவலகத்திற்கு நேரில் சென்று சிலம்பு ரயிலை தினமும் இயக்க கோரிக்கை வைத்துள்ளார். உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: