ராணுவ பயிற்சி கல்லூரியில் 78வது பிரிவு வகுப்பு துவங்கியது

குன்னூர்: வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் 78வது பிரிவு வகுப்புகள் தொடங்கியது அதில் 439 அதிகாரிகள் பயிற்சியில் சேர்ந்துள்ளனர்.நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் ராணுவ பயிற்சி கல்லூரி செயல்பட்டு வருகிறது. உலக அளவில் பிரசித்தி பெற்ற இந்த கல்லூரியில் அமெரிக்கா, கென்யா, பிரிட்டன், பாகிஸ்தான், இலங்கை உட்பட பல வெளிநாடுகளை சேர்ந்த  அதிகாரிகள் பயிற்சி பெறுகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் 77-வது பட்டமளிப்பு விழா நடந்தது. 479 அதிகாரிகள் பட்டங்கள் பெற்றனர். இந்நிலையில், 78-வது பயிற்சி வகுப்புகள் நேற்று தொடங்கின. பயிற்சி வகுப்புகளை கல்லூரி முதல்வர் கமாண்டென்ட் லெப்டினன்ட் ஜெனரல்  மோகன், தொடங்கி வைத்தார். இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையைச் சேர்ந்த 439 அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் தொடர்புடைய சேவைகளை சேர்ந்த அதிகாரிகள் பயிற்சி பெற உள்ளனர். 78வது பிரிவு வகுப்பில்,  படிப்பில் நட்பு நாடுகளைச் சேர்ந்த 39 அதிகாரிகள் அதிகாரிகள் பங்கேற்று பயிற்சி பெற உள்ளனர். 11 மாதங்கள் நடக்கும் இந்த பயிற்சி வகுப்புகள் நிறைவடைந்ததும் சென்னை பல்கலைக்கழகத்தின் சார்பில்  பட்டம் வழங்கப்படும்.

Related Stories: