மனைவியை துன்புறுத்திய கணவர் மீது வழக்கு பதிவு

உளுந்தூர்பேட்டை, ஜூன் 6: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பாதூர் கிராமத்தை சேர்ந்தவர் கிட்டு மகன் மகேஷ்ராஜன்(33). இவருக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது. இதில் வனிதா(30) என்ற மனைவியும், இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். இந்த நிலையில் அடிக்கடி மகேஷ்ராஜன் குடித்துவிட்டு வந்து மனைவி வனிதாவிடம் உன் பெற்றோரிடம் சென்று பணம் வாங்கி வா என கூறி அடித்து துன்புறுத்தி வந்துள்ளதாக தெரிகிறது. சம்பவத்தன்று இதேபோல் மகேஷ்ராஜன் மற்றும் அவருடைய தந்தை கிட்டு, தாய் ராஜேஸ்வரி ஆகிய 3 பேரும் திட்டி தாக்கியதில் படுகாயம் அடைந்து உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து திருநாவலூர் காவல்நிலையத்தில் வனிதாவின் தாய் ரமணி கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் 3 பேர் மீதும் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகிறார்.

Related Stories: