ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீட கும்பாபிஷேகம்

சிதம்பரம், ஜூன் 6: சிதம்பரத்தை அடுத்த கொத்தங்குடி ஊராட்சி முத்தையா நகரில் 60வது ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் புதியதாக கட்டப்பட்டது. இக்கோயிலின்  கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. கும்பாபிஷேக தினமான நேற்று மூன்றாம் கால வேள்வி பூஜை நடந்தது. தொடர்ந்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நாயகர் பங்காரு அடிகளார், கோபுர கலசத்திற்கு வேள்வியில் வைத்து உருவேற்றிய புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார்.  

சிதம்பரம் தொகுதி பாண்டியன் எம்எல்ஏ, டிஎஸ்பி ரமேஷ்ராஜ், ஆன்மிக இயக்க துணை தலைவர் தேவி ரமேஷ், ஆதிபராசக்தி மருத்துவமனை மேலாண்மை இயக்குநர் ரமேஷ், வழக்கறிஞர் அகத்தியன், மாவட்ட தலைவர் கிருபானந்தன், அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் ரத்தினசபாபதி, மாவட்ட துணை தலைவர் முருகு வெங்கட்ராமன், மாவட்ட செயலாளர் செல்வராஜ், மாவட்ட பொருளாளர் ஜெயபால், மாவட்ட இளைஞரணி தலைவர் சங்கரன், வேள்விக்குழு தலைவர் கோவிந்தராஜ், மாவட்ட பிரசார குழு தலைவர் சுப்ரமணியன், மாவட்ட மகளிரணி தலைவர் சீத்தாலட்சுமி, மாவட்ட தணிக்கை குழு தலைவர் கணபதி, கூடுதல் மாவட்ட செயலாளர் பார்த்தசாரதி, கொத்தங்குடி ஊராட்சி தலைவர் வேணுகோபால், அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்கள் பாலகுமார், ஞானகுமார், அருளானந்தம் மற்றும் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: