சமூக விழிப்புணர்வு கூட்டம்

பட்டிவீரன்பட்டி: பட்டிவீரன்பட்டி அருகே உள்ள சித்தரேவில் மக்களைத் தேடி மாவட்ட காவல்துறை எனும் சமூக விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. பட்டிவீரன்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேசன் தலைமை வகித்தார். சப்இன்ஸ்பெக்டர் முத்தையா முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில், ‘பெண்கள் வன்கொடுமை சட்டம், குழந்தைகள் பாதுகாப்புச் சட்டம், செல்போனில் வங்கியிலிருந்து பேசுவதாக கூறி, வங்கி பணத்தை மோசடி செய்வதை தடுக்கும் சைபர் கிரைம் சட்டம், 18 வயதிற்கு குறைவான பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டால் போக்சோ சட்டம் ஆகியவை குறித்து விரிவாக எடுத்துக்கூறினர். மேலும், டூவீலரில் செல்வோர் ஹெல்மெட் அணிய வேண்டும் என வலியுறுத்தினர். இதில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Related Stories: