நெல்லை அருகே சுத்தமல்லியில் பேட்டரி பைக் எரிந்து நாசம்

பேட்டை:  பேட்டை சுத்தமல்லி அடுத்த கொண்டாநகரத்தைச் சேர்ந்தவர் டேனியல் ஆசீர் (42). மருந்து விற்பனை பிரதிநிதி. இவரது வீட்டு முன்பு நிறுத்தப்பட்டிருந்த இவரது பேட்டரி பைக் நேற்று காலை திடீரென தீப்பிடித்து எரிந்தது.இதை கண்டு பதறிய அவர், தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றார். அதற்குள் பைக் தீயில் கருகி நாசமானது. தகவலறிந்து விரைந்து வந்த பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் முத்தையா தலைமையிலான வீரர்கள் தீ மேலும் பரவாமல் தடுத்தனர். வாகனத்தை ரீசார்ஜ் செய்யும்போது மின்கசிவு ஏற்பட்டு பேட்டரி பைக் எரிந்ததா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories: