சொந்த இடத்தை மலைவாழ் மக்களுக்கு இலவசமாக வழங்கிய அமைச்சர்

செஞ்சி, மே 31: செஞ்சியில் மலைவாழ் மக்களுக்கு அமைச்சர் மஸ்தான் தனது சொந்த இடத்தை இலவசமாக வழங்கினார். செஞ்சி பேரூராட்சி எல்லைக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் (இருளர் பழங்குடியினர்) வீட்டுமனை பட்டா கேட்டு கடந்த 26.2.2021 அன்று தீவனூரில் நடந்த உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் மனு கொடுத்தனர். இந்நிலையில் இருளர் இன மக்களுக்கு வழங்குவதற்காக செஞ்சி பேரூராட்சி எல்லைக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் பகுதியில் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் பெயரில் உள்ள  புஞ்சை நிலத்தை நேற்று தனது மனைவி மற்றும் மூத்த மகளுடன் செஞ்சி ரிஜிஸ்டர் ஆபீசுக்கு சென்று தமிழக ஆளுநர் பெயருக்கு இலவசமாக எழுதி கொடுத்தார். அப்போது செஞ்சி சப்-ரிஜிஸ்டர் ஆறுமுகம், செஞ்சி தாசில்தார் பழனி, ஒன்றிய சேர்மன் விஜயகுமார், ஒன்றிய கவுன்சிலர் பச்சையப்பன் மற்றும் பலர் உடன் இருந்தனர். அமைச்சர் எழுதிக் கொடுத்த சொத்தின் மதிப்பு சுமார் ரூ.60 லட்சம் ஆகும்.

Related Stories: