திருவாரூர் தியாகராஜ கோயிலில் தமிழக கவர்னர் சுவாமி தரிசனம்

திருவாரூர், மே 28: திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று மாலை சாமி தரிசனம் செய்தார். திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 2 நாள் தேசிய கருத்தரங்கை தமிழக கவர்னர் ஆர்.என். ரவி துவக்கி வைத்தார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று காலை 8.30 மணி அளவில் திருச்சி விமான நிலையம் வந்தடைந்த கவர்னர் ரவி, பின்னர் அங்கிருந்து கார் மூலம் தஞ்சாவூர், திருவாரூர் வழியாக மத்திய பல்கலைக்கழகம் சென்றடைந்தார். அங்கு கருத்தரங்கை துவக்கி வைத்துப் பேசிவிட்டு மதிய உணவிற்கு பின்னர் அங்குள்ள விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுத்தார்.

அதனைத்ெதாடர்ந்து மாலை 5.15 மணி அளவில் அங்கிருந்து புறப்பட்டு 5.30 மணிக்கு திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயிலுக்கு வந்தடைந்தார். அவருக்கு சிவாச்சாரியார்கள் மூலம் பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் அங்குள்ள மூலவரான வன்மீகநாதர், உற்சவரான தியாகராஜர் மற்றும் கமலாம்பாள் சன்னதிகளில் சாமி தரிசனம் செய்த கவர்னர், திருவாரூர் விளமல் சுற்றுலா மாளிகைக்கு சென்று அங்கிருந்து கார் மூலம் தஞ்சாவூர் வழியாக இரவு திருச்சி விமான நிலையம் சென்றார். பின்னர் அங்கிருந்து விமானத்தில் சென்னை புறப்பட்டு சென்றார்.

Related Stories: