விழுப்புரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 48 வாகனம் ₹2.94 லட்சத்துக்கு ஏலம்

விழுப்புரம், மே 26: விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தால் பறிமுதல் செய்யப்பட்டு நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களின் உரிமையாளர்களால் அரசுக்கு செலுத்த வேண்டிய வரி மற்றும் இணக்க கட்டணம் செலுத்தி இதுநாள் வரை வாகனத்தை விடுவித்து செல்லாத காரணத்தினால் 46 ஆட்டோக்கள், 2 இலகுரக சரக்கு வாகனங்கள் ஆகியவை நேற்று விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பொது ஏலம் விடப்பட்டது.

விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக துணை மேலாளர் (தொழில்நுட்பம்) செல்வக்குமார், வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கோவிந்தராஜ், மாணிக்கம், வட்டார போக்குவரத்து அலுவலரின் நேர்முக உதவியாளர் கங்காதரன் ஆகியோரின் முன்னிலையில் நடந்த இந்த ஏலத்தில் 48 வாகனங்கள் ரூ.2.94 லட்சத்துக்கு ஏலம் போனது. இந்த தொகை அரசுக்கு வருவாயாக கருவூலத்தில் செலுத்தப்பட்டது.

Related Stories: