பண்ருட்டி அருகே வீரட்டானேஸ்வரர் கோயிலில் உழவாரப்பணி

பண்ருட்டி, மே 26: பண்ருட்டி அடுத்த திருவதிகையில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான வீரட்டானேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஒவ்வொரு வருடமும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சிவனடியார்கள் வந்து தங்கி உழவாரப்பணியில் ஈடுபடுவது உண்டு. அந்த வகையில் நேற்று முன்தினம் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த 175 சிவனடியார்கள் திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலுக்கு வந்து 3 கோபுர தளங்களில் உள்ள அனைத்து சாமிகளையும் இயற்கை மூலிகைகளால் தூய்மை செய்தனர். இதனை தொடர்ந்து கோயில் முழுவதும் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளையும் அகற்றி தூய்மையான கோயில் என பறைசாற்றினர். இதற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் சீனுவாசன் செய்திருந்தார்.

Related Stories: