பெருங்களூர் ஊராட்சியில் கலையரங்கம் கட்ட பூமி பூஜை

கந்தர்வகோட்டை, மே 25: புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் முதல்நிலை ஊராட்சியில் உள்ள தெற்கு தெரு சங்கடி விநாயகர் கோயில் எதிர்புறம் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் கலையரங்கம் கட்ட சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா தலைமையிலும் ஊராட்சி மன்றத்தலைவர் சரண்யா ஜெய்சங்கர் முன்னிலையிலும் பூமி பூஜை நடந்தது. மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு அடையாள அட்டைகளை பயனாளிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா வழங்கினார். நிகழ்ச்சியில் புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய ஆணையர் குமாரவேல் ,உதவி பொறியாளர் கண்ணகி ,ஒன்றிய குழு உறுப்பினர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: