கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

கந்தர்வகோட்டை, மே 24: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் கல்லாக்கோட்டை ஊராட்சியில் தமிழ்நாடு அரசு வேளாண்மை துறையின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் இந்த திட்டத்தினை காணொலி காட்சி மூலம் நேற்று தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை தலைமையில் பயனாளிகளுக்கு பல நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது. இதில் சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை பேசுகையில் தமிழகரசில் இந்த திட்டத்தின் கீழ் 13 துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்படுவதால் விவசாயிகள் பெருமளவில் நல்லதொரு பயன் அடையலாம் என்று கூறினார். கிராமங்கள் தொரும் ஊராட்சி செயலகம் கட்டப்படும் இதில் கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி மன்ற தலைவர் ஊராட்சி செயலாளர் என இணைந்து செயல்படுவார்கள் என தமிழக முதல்வர் கூறியுள்ளார் என கூறினார்.

தாசில்தார் புவியரசன் பேசுகையில், விவசாயிகளுக்கு தேவையான வண்டல் மண்களை எடுத்துக் கொள்ள முறையாக விண்ணப்பித்தால் உடனடியாக அனுமதி வழங்க ஆவணம் செய்யப்படும் என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கார்த்திக் (எ) ரத்தினவேல் ,மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஸ்டாலின், வேளாண்மை உதவி இயக்குனர் அன்பரசன், ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் திலகவதி ,தரன், கல்லாக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பவுன்ராஜ், கவுன்சிலர் சுதா ராஜேந்திரன், மற்றும் அரசு அலுவலர்கள், விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: