பண்ருட்டியில் கோயில் சொத்துக்கள் மீட்கப்படும்

பண்ருட்டி, மே 24:   பண்ருட்டி நகராட்சி நகரமன்ற கூட்டம் நகரமன்ற தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் சிவா, ஆணையர் மகேஸ்வரி, மேலாளர் ரவி முன்னிலை வகித்தனர். கூட்டம் துவங்கியதும் கவுன்சிலர்கள் பேசியதாவது, சீனுவாசன் திமுக: எனது வார்டு பகுதியில் வடிகால் வசதி சரிவர இல்லை, ஆணையர் எல்லா வீதிகளிலும் வந்து ஆய்வு செய்ய வேண்டும்,   ஆனந்தி சரவணன் திமுக: எனது வார்டு பகுதியில் அமைந்துள்ள கழிவுநீர் வாய்க்கால் வரவர சுருங்கிகொண்டே செல்கிறது. இதனை அகலப்படுத்தி தூர்வார வேண்டும்.

துணைத்தலைவர் சிவா: 33 வார்டுகளிலும் வீதிகளின் பெயர் அறியும் வண்ணம் போர்டுகள் வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கவுன்சிலர்களும் தங்களது அமர்வு கட்டணத்தை இலங்கை தமிழர்களுக்கு வழங்கினர்.     இதைதொடர்ந்து, கவுன்சிலர்கள் திமுக கதிர்காமன், அதிமுக மோகன், உள்ளிட்டோர் பேசினர். கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு நகரமன்ற தலைவர் ராஜேந்திரன் பதிலளித்து பேசியதாவது, மழை காலங்களில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணி நானே முன்னின்று செய்து வருகிறேன். கலைஞரின் நமக்கு நாமே திட்டம் சிறப்பாக செயல்படுகிறது. 99 வருட குத்தகை மூலம் கோயில் இடங்கள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது, அக்காத்தம்மன் கோயில், அய்யனார் கோயில் சொத்துக்கள் மீட்பு பணி மேற்கொள்ளப்பட்டு அரசிடம் ஒப்படைக்கப்படும் என்றார். மேலும் அனைத்து கவுன்சிலர்களின் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்றார்.

Related Stories: