கோயில் உண்டியலை உடைத்து கொள்ளை

விருத்தாசலம், மே 21:  விருத்தாசலம் அடுத்த கருவேப் பிலங்குறிச்சி அருகே உள்ள தே.பவழங்குடி கிராமத்தில் அரிச்சந்திர மகாராஜா கோயில் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு பூசாரிகள் கோயிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டனர். நேற்று காலை வந்து கோயிலை திறக்க சென்றபோது, கோயிலின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கோயிலுக்குள் சென்று பார்த்தபோது உள்ளே இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த காணிக்கை பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.

அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற கருவேப்பிலங்குறிச்சி போலீசார் கோயில் உண்டியல் உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டும் அப்பகுதியில் கிடைத்த சில தடயங்களை கொண்டும் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். உண்டியலில் சுமார் 50 ஆயிரம் ரூபாய் இருந்திருக்கலாம் என தெரிகிறது.

கடந்த 7 வருடங்களுக்கு முன்பு மே 20ம் தேதி கும்பாபிஷேகம் நடந்துள்ளது. கும்பாபிஷேகம் நடந்த அதே நாளில் கோயில் உண்டியல் உடைக்கப்பட்டு திருட்டு சம்பவம் நடந்துள்ளது. இதனால் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டறிய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: