ஓடும் பஸ்சில்பெண்ணிடம் செயின் அபேஸ்

நாகர்கோவில், மே 14: குளச்சல் பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன். இவரது மனைவி மரியபுஷ்பம்(73). தற்போது இவர்கள் நாகர்கோவில் அருகே உள்ள மேலசூரங்குடி கோல்டன் சிட்டியில் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் மரியபுஷ்பம் சொந்த ஊரான குளச்சலுக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து பஸ்சில் நாகர்கோவிலுக்கு வந்துகொண்டு இருந்தார். நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் பஸ்சை விட்டு இறங்கி பின்னர் மேலசூரங்குடிக்கு பஸ்சில் ெசன்றுக்கொண்டு இருந்தார். புன்னைநகர் பகுதியில் பஸ் சென்றுகொண்டு இருந்தபோது, மரியபுஷ்பம் கழுத்தை பார்த்துள்ளார். அப்போது கழுத்தில் கிடந்த 7 பவுன் செயினை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பஸ்சில் தேடிபார்த்துள்ளார்.  இது குறித்து மரியபுஷ்பம் நேசமணிநகர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மரிய புஷ்பத்தின் கழுத்தில் கிடந்த நகையை பஸ்சில் கூட்டநெரிசலை பயன்படுத்தி யாரோ பறித்து இருக்கலாமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மரியபுஷ்பம் அண்ணா பஸ் நிலையத்தில் நின்றபோது, அவரை யாராவது பின் தொடர்ந்து சென்றார்களா என்பது குறித்து அறிய அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு நடத்தி வருகின்றனர்.

Related Stories: