பண்ருட்டி பிரதீபா கேஷ்யூஸ்க்கு சிறந்த ஏற்றுமதிக்கான தங்க விருது

பண்ருட்டி, மே 14: மத்திய அரசின் வர்த்தக அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு சார்பில் தென் மண்டல சிறந்த ஏற்றுமதியாளர்களுக்கான விருது வழங்கும் விழா சென்னை ஆழ்வார்பேட்டையில் நடந்தது. விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். இந்த விழாவில் பண்ருட்டி பிரதீபா கேஷ்யூஸ் நிறுவனத்துக்கு சிறந்த ஏற்றுமதிக்கான தங்க விருது வழங்கப்பட்டது. விருதை பிரதீபா கேஷ்யூஸ் தொழிலதிபர்கள் ராமகிருஷ்ணன், ரவி ஆகியோர் தமிழக சிறுகுறு தொழில் அமைச்சர் தாமோ அன்பரசனிடம் பெற்றுக்கொண்டனர். விழாவில் தமிழகம் முழுவதுமுள்ள முந்திரி ஏற்றுமதி நிறுவன உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: