கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நில அளவை புத்தாக்க பயிற்சி

முஷ்ணம், மே 14: கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நில அளவை அலுவலர்கள் புத்தாக்க பயிற்சி அளித்தனர். முஷ்ணம் வட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நில அளவைக்கான புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டது. நில அளவை வட்ட துணை ஆய்வாளர் ஜெயலட்சுமி, வட்ட சார் ஆய்வாளர் ரமேஷ்பிரபு ஆகியோர் கலந்து கொண்டு, நில அளவைக்கான கோப்புகளை தயார் செய்வது, உட்பிரிவு கோப்புகளை ஆய்வு செய்வது மற்றும் செயல்முறை பயிற்சி, வயல்வெளி நிலத்தில் அளவீடு செய்து காண்பிக்கப்பட்டது. இதில் முஷ்ணம் வட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

Related Stories: