குடித்துவிட்டு தகராறு கடைக்காரர் மீது புகார்

கடலூர், மே 14: நெய்வேலி தெற்கு சேப்ளாநத்தத்தை சேர்ந்த குணசேகரன் (65) என்பவர் காவல் உதவி எண்ணில் தொடர்புகொண்டு தனது தாயாருக்கு சொந்தமான இடத்தின் பத்திரத்தை, தனது தம்பி செந்தில்குமார் வைத்துக் கொண்டு தர மறுத்து பிரச்னை செய்வதாக புகார் தெரிவித்ததன்பேரில் மந்தாரக்குப்பம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.அண்ணன், தம்பிகளுக்கு இடையிலான குடும்ப சொத்து பாகப்பிரிவினை தொடர்பான பிரச்னை என்பதால், நீதிமன்றத்தை அணுகி தீர்வு பெற்றுக்கொள்ளும்படியும், மேற்கொண்டு எந்த ஒரு பிரச்னையும் செய்து கொள்ளக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டு பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டது.

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியை சேர்ந்த குமுதம்(33) என்பவர் ஆவின் பால் பூத் நடத்தி வருகிறார். அதன் அருகில் முட்டை கடை நடத்திவரும் ஏழுமலை என்பவர், குடித்துவிட்டு வந்து அடிக்கடி பிரச்னை செய்வதாக அளித்த புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர்

 காவல் நிலைய ஏட்டு பாரதி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று, ஏழுமலையை எச்சரித்து, இனி எந்த பிரச்னையும் செய்யக் கூடாது என்று அறிவுரை வழங்கினார். மேலும் பிரச்னை செய்தால், சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டது.

Related Stories: