தமிழ்சங்கம், பிஆர்பி நிறுவனம் சார்பில் தோகைமலையில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு

தோகைமலை, மே 12: கரூர் மாவட்டம் தோகைமலை தமிழ்சங்கம் மற்றும் பிஆர்பி நிறுவனம் சார்பாக கோடைகால தண்ணீர் பந்தல் குளித்தலை -மணப்பாறை மெயின் ரோட்டில் உள்ள காவல்நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ளது. தண்ணீர் பந்தலை தமிழ்சங்கத்தின் நிறுவனர் மற்றும் பிஆர்பி தொழிலதிபர் எம்.காந்திராஜன் திறந்து வைத்து இளநீர், தர்பூசணி, நீர்மோர், பானகம் ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழங்கினார். தோகைமலை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், திமுக பொதுக்குழு உறுப்பினர் தர்மர், முன்னாள் ஒன்றியக்குழு துணை தலைவர் சின்னவழியான், திமுக இளைஞரணி அமைப்பாளர் சசிகுமார், ஊராட்சி தலைவர்கள் தோகைமலை தனமாலினி கந்தசாமி, ஆலாத்தூர் ஜெயபால், நாட்டாமை ரெங்கநாதன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் வேலுச்சாமி, அதிமுக நிர்வாகிகள் பெருமாள், ராமச்சந்திரன், தோகைமலை மேற்கு ஒன்றிய விசி செயலாளர் ராஜ்குமார், முன்னாள் கொசூர் ஊராட்சி தலைவர் ராமர், தமிழ்சங்கத்தின் நிர்வாகிகள் குணசேகரன், செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஒவ்வொரு ஆண்டும் கோடைகாலங்களில் தோகைமலை தமிழ்சங்கம் மற்றும் பிஆர்பி நிறுவனம் சார்பாக தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: