சீனாபுரம் கொங்கு வேளாளர் பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்த தான விழா

ஈரோடு, மே 10:  சீனாபுரம் கொங்கு வேளாளர் பாலிடெக்னிக் கல்லூரியில் உலக ரெட்கிராஸ் தினவிழா மற்றும்  ரத்த தான விழா நடைபெற்றது. ஈரோடு மாவட்டச் செயலாளர் தாமஸ் வி.ஜான் தலைமை தாங்கினார். தலைவர் பல்லவி பரமசிவன் வரவேற்றார். பெருந்துறை போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பெரியசாமி ரத்ததான முகாமை துவக்கி வைத்து பேசினார். துணைத் தலைவர் டி.என்.சென்னியப்பன்,தமிழரசி,ஜேசீஸ் மண்டல இயக்குனர் கோபி, ஜேசீஸ் தலைவர் கலைவாணி, செயலாளர் பிரபா, நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் துணைத் தலைவர் மாரியப்பன், செயலாளர் விஜயா, இணைச் செயலாளர் பழனிச்சாமி, ஜார்ஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஈரோடு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவர் ஹேமப்ரியா, கல்லூரியின் முதல்வர் விஸ்வநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

கல்லூரியின் ஜூனியர் ஜேசீஸ் அமைப்பை மண்டலம் 17-ன் துணைத் தலைவர் பாலசுப்பிரமணியம் துவக்கி வைத்து புதிய நிர்வாகிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வாழ்த்துரை வழங்கினார். செயலாளர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் நன்றி கூறினார். விழாவில் ரெட் கிராஸ்,ஜேசீஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 20 ஏழைகளுக்கு ரெட்கிராஸ் சங்கத்தின் சார்பில் ஹைஜீனிக் கிட் வழங்கப்பட்டது.

Related Stories: