அழகிய நாச்சியம்மன் கோயிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு

பொன்னமராவதி, ஏப்.25: பொன்னமராவதி அழகியநாச்சியம்மன் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு மகா ருத்ர யாகம் நடத்தி வழிபாடு நடந்தது. தமிழ் வருடபிறப்பு முடிந்து முதல் தேய்பிறை அஷ்டமி என்பதால் இரவு சிறப்பு அலங்காரம் செய்து அழகு நாச்சியம்மன்கோயிலில் அமைந்துள்ள காலபைரவருக்கு ருத்ர யாகதில் புனிதநீர் எடுத்து வந்து சிவாச்சாரியார்கள் வேள்வி வழிபாடு நடத்தினர். பூர்ணாகுதி முடிந்தபின் பூஜிக்கப்பட்ட புனிதநீரை எடுத்து கோயிலை சுற்றி வலம் வந்து கால பைரவருக்கு அபிஷேகம் நடத்தி வெள்ளி அங்கி சாத்தி வழிபாடு நடத்தினர். இதில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் நடைபெற்றது.

Related Stories: