1000 ஆண்டு பழமையான கைலாசநாதர் கோயிலில் ருத்ர பாராயண வேள்வி

ஆட்டையாம்பட்டி, ஏப்.12:ஆட்டையாம்பட்டி அடுத்துள்ள கண்டர்குலமாணிக்கம் பகுதியில், 1000 ஆண்டு பழமையான கைலாசநாதர் கோயில் உள்ளது. இந்த கோயிலில். நேற்று மக்கள் நன்மைக்காக ருத்ர பாராயண வேள்வி நடைபெற்றது. யாகபூஜை முடிந்த பின்னர். கலச தீர்த்தத்தால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ருத்ர பாராயண யாகத்தால் குறையாத நீர்வளம், விவசாயம் செழிக்கும், குழந்தைப்பேறு கிடைக்கும் என பக்தர்கள் நம்புகின்றனர். கோயில் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories: