மக்கள் நீதி மய்யத்தினர் கலெக்டர் ஆபிசில் மனு

நாமக்கல், மார்ச் 22: மக்கள் நீதிமய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் காமராஜ், ஜெயபிரகாஷ், ஆதம்பரூக் மற்றும் நிர்வாகிகள் நேற்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அளித்த கோரிக்கை மனு விபரம்: மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் அரசு நிர்வாகமானது துரிதமாக செயல்பட்டு, அரசின் சேவைகளை எளிய முறையிலும், விரைவாகவும் மக்களுக்கு சென்று சேர்க்க வேண்டும். பல்வேறு காரணங்களால் அரசு அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்கள் அலைகழிக்கப்படுகிறார்கள். எனவே, அரசு அலுவலர்களின் பொறுப்புடைமையை அதிகரித்து, அரசு சேவைகளின் தரத்தை உறுதிப்படுத்தி, சேவை பெறும் உரிமை சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும். அரசு சேவைகள் அனைத்தும் காலதாமதம் இல்லாமல் கிடைக்க செய்ய வேண்டும். பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே இதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

Related Stories: