மடப்புரம் கோயிலில் ரூ.25 லட்சம் உண்டியல் காணிக்கை

திருப்புவனம், மார்ச் 22: திருப்புவனம் அருகே மடப்புரம் அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் காணிக்கை உண்டியல்கள் 40 நாட்களுக்கு ஒரு முறை திறக்கப்பட்டு எண்ணுவது வழக்கமாகும். இந்நிலையில் நேற்று காலை உண்டியல்கள் சிவகங்கை உதவி ஆணையர் செல்வராஜ், செயல் அலுவலர் மற்றும் உதவி ஆணையர் செல்வி ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது. உண்டியலில் ரூ.25 லட்சத்து 97ஆயிரத்து 716 ரொக்கமாகவும், தங்கம் 244 கிராம் 520 மிலி, வெள்ளி 420.400 கிராம் காணிக்கை செலுத்தப்பட்டுள்ளது என கோயில் செயல் அலுவலர் செல்வி தெரிவித்தார். உடன் அறங்காவல் குழு தலைவர் பழனியப்பன், கண்காணிப்பாளர் பாஸ்கரன் ஆகியோர் இருந்தனர்.

Related Stories: