மன்னை கிழக்கு ஒன்றியத்தை சேர்ந்த 54 குழுக்களை சேர்ந்த பெண்களுக்கு மொத்தம் ரூ 1.10 கோடி கடனுதவி

மன்னார்குடி, மார்ச். 19: இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட வடபாதிமங்கலம் அடுத்த புள்ளமங்கலம் கூட்டுறவு கடன் வங்கி மூலம் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு கடன் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. மன்னை கிழக்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய குழு உறுப்பினருமான ஐவி குமரேசன், கூட்டுறவு சங்க தலைவர் அரிச்சந்திரபுரம் செல் வம், துணை பதிவாளர் ராமசுப்பு, மகளிர் திட்ட வட்டார மேலாளர் மாலா ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.

விழாவிற்கு திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணன் எம்எல்ஏ தலைமை வகித்து 7 ஊராட்சிகளை சேர்ந்த 54 மகளிர் சுய உதவி குழுவிற்கு ரூ 1 கோடியே 10 லட்சம் மகளிர் கடனுக்கான காசோலை களை வழங்கி பேசினார். விழாவில், ஊராட்சி மன்ற தலைவர்கள் புள்ளமங்கலம் பானுமதி கிருஷ்ண மூர்த்தி, சாத்தனூர் செந்தில், வேளுக்குடி பிரகாஷ், ஒன்றியக்குழு உறுப்பினர் பரம வினோதா ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக, சங்க செயலாளர் துரைராஜன் வரவேற்றார். கள மேலாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

Related Stories: