ஏர்வாடியில் கொடி அணிவகுப்பு

ஏர்வாடி, பிப். 18:   தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கிறது. இத்தேர்தலில் மக்கள் பயமின்றி வாக்களிக்க ஏதுவாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாங்குநேரி டிஎஸ்பி காந்தி தலைமையில் ஏர்வாடியில் போலீசாரின் கொடி அணிவகுப்பு நடந்தது. ஏர்வாடி வடக்கு மெயின் ரோட்டில் இருந்து புறப்பட்ட இந்த அணிவகுப்பு தெற்கு மெயின் ரோடில் நிறைவடைந்தது. இதில் டிஎஸ்பி பெரியசாமி, இன்ஸ்பெக்டர்கள்

ஆதம் அலி, பிரேமா ஸ்டாலின், எஸ்ஐக்கள் முத்துபாண்டி, ராஜேந்திரன், ஆன்றோ பிரதீப் மற்றும் போலீசார் என ஏராளமானோர் பங்கேற்றனர். விகேபுரம்:  விகேபுரம் காவல் நிலையம் முன்பிருந்து துவங்கிய கொடி அணிவகுப்புக்கு அம்பை டிஎஸ்பி பிரான்சிஸ் தலைமை வகித்தார். விகேபுரம் இன்ஸ்பெக்டர் சீதாலட்சுமி முன்னிலை வகித்தார். இதில் எஸ்ஐக்கள் ஜெய்சங்கர், சிவதாணு, சிறப்பு எஸ்ஐ ரவி மற்றும் நூற்றுக்கணக்கான போலீசார்  பங்கேற்ற பேரணி சந்தனமாரியம்மன் கோயிலில் நிறைவடைந்தது.

Related Stories: