நாலாட்டின்புதூர் கோயில் கும்பாபிஷேக விழா

கோவில்பட்டி,பிப். 12: கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூர் திருசெந்தில்முருகன் கோயில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது. இதில் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின்புதூர் வள்ளி தெவசேன சமேத திருசெந்தில்முருகன் கோயில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி கடந்த 9ம்தேதி சிறப்பு பூஜைகளும், கணபதி ஹோமம், தன பூஜை, தான்யபூஜை, நவக்கிரக பூஜை, கோ பூஜை, யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து யாகசாலையில் இருந்து தீர்த்த குடங்கள் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, கோவில் பிரகாரம் வழியாக வந்து விநாயகர், சுப்பிரமணியர் மற்றும் சாலகார கோபுர கலசங்களுக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். கும்பாபிசேகத்தை ரகு பட்டர் குழுவினர் செய்தனர். விழாவில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், மாவட்ட ஜெ. பேரவை இணைச் செயலாளர் நீலகண்டன் மற்றும் அழகர்சாமி, கோபி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: