நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மாநகரில் 56 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை

சேலம்: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி, சேலம் மாநகராட்சியில் பதற்றமான 56 வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்படுகிறது. சேலம் மாநகராட்சி உள்ளாட்சி தேர்தலுக்காக 709 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் செய்யப்பட வேண்டிய அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி ஏற்படுத்துதல், வாக்குச்சாவடிகளில் மின்சார வசதி ஏற்படுத்துதல், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பதற்கு வாக்குச்சாவடியில் இடவசதி, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் முகவர்கள் அமர்வதற்கான இருக்கை வசதி ஏற்பாடு செய்தல் போன்ற பணிகள்  மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி கேமரா பொறுத்தப்படுகிறது.

இதனிடையே, சேலம் மாநகராட்சியில், 709 வாக்குச்சாவடிகளில் 56 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு, அங்கு கூடுதலாக சிசிடிவி கேமரா பொருத்தப்படுகிறது. இந்த வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பணியில் போலீசார் அதிகரிக்கப்படவுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், சேலம் மாநகராட்சியில் 60 வார்டுகளில் ஆண் வாக்காளர்கள் 3 லட்சத்து 52 ஆயிரத்து 523 பேரும், பெண் வாக்காளர்கள் 3 லட்சத்து 66 ஆயிரத்து 751 பேரும். இதர வாக்காளர் 87 பேரும் என மொத்தம் 7 லட்சத்து 19 ஆயிரத்து 361 வாக்காளர்கள் உள்ளனர்.

புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம் அளித்துவர்கள். அவர்களின் விண்ணப்பம் பரிசீலனை செய்யப்பட்டு துணை பட்டியல் வெளியிடப்படும். மாநகரில் 56 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதலாக சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு, பாதுகாப்பு அதிகரிக்கப்படும், என்றனர்.

Related Stories: