ஊட்டி: ஊட்டி நகராட்சிக்கு குடிநீர் வழங்கும் பார்சன்ஸ்வேலி அணை 3-வது குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணானது. ஊட்டி நகராட்சியின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பார்சன்ஸ்வேலி அணை உள்ளது. இந்த அணையில் இருந்து ஊட்டி நகருக்கு குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு வரப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 3-வது குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டு கடந்த ஓராண்டிற்கு முன்பு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. ஊட்டி நகரில் 3க்கும் மேற்பட்ட இடங்களில் பெரிய அளவிலான தொட்டிகள் அமைத்து அதன் மூலம் குடியிருப்புகளுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், ஊட்டி - குன்னூர் சாலையில் சவுத் வீக் பகுதியில் நீரேற்று நிலையம் மற்றும் குடிநீர் தொட்டி உள்ளது.
