நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து அமைச்சர் சி.வெ. கணேசன் தலைமையில் ஆலோசனை கூட்டம்

விருத்தாசலம், பிப். 1:  நகர்மன்ற தேர்தல் தொடர்பான காணொலி ஆலோசனை கூட்டம் விருத்தாசலத்தில் தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தலைமையில் நடந்தது. தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட அமைப்பாளர் ஆனந்தன் முன்னிலை வகித்தார். இதில் நடக்க உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீத வெற்றியை பெற்று முதல்வரிடம் ஒப்படைக்க வேண்டும். தமிழகம் முழுவதும் நடந்து முடிந்த அனைத்து தேர்தல்களிலும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வெற்றிக்கு அரும்பாடுபட்ட மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், திமுக தகவல் தொழில்நுட்ப அணியை சிறப்பாக வழிநடத்தி கழகத்தின் வெற்றிக்கு முக்கிய பங்காற்ற செய்த நிதித்துறை அமைச்சர் முன்னாள் தகவல் தொழில் நுட்ப அணி மாநில செயலாளர் பழனிவேல் தியாகராஜன், இதற்கு பெரிதும் காரணமாய் இருந்து ஒத்துழைப்பு தந்த கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் தொழிலாளர் துறை அமைச்சர் சி.வெ. கணேசன் ஆகியோருக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவிப்பது.

நடைபெற இருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக தகவல் தொழில்நுட்ப அணியை சேர்ந்தவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்புகளை வழங்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர்கள் நாராயணன், முகம்மது ரபி, ராஜ்குமார், திவ்யலட்சுமி, தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் திட்டக்குடி ரமேஷ், பண்ருட்டி சுரேஷ், விருத்தாசலம் தர், சோசியல் மீடியா தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் பண்ருட்டி சிலம்பரசன், திட்டக்குடி விக்னேஷ், நெய்வேலி கேஜி மோகன், விருத்தாசலம் கிருஷ்ணகுமார், அண்ணாகிராமம் ஞானவேல் மற்றும் ஒன்றிய, நகர, பேரூர் ஒருங்கிணைப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: