திருப்பூர்: திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத்திடம், தமிழ் சிறுத்தைகள் கட்சியின் நிறுவன தலைவர் அகத்தியன் தலைமையில், தந்தை பெரியார் திராவிடர் கழகம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, ஆதித்தமிழர் சனநாயக பேரவை, தலித் விடுதலை கட்சி, எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் ஒன்றியம் வீரலூர் கிராமத்தில் பொதுப்பாதையில் அருந்ததியர் சடலத்தை எடுத்து செல்ல, எதிர்ப்பு தெரிவிப்பதை கண்டித்தும், அருந்ததியர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கண்டிப்பதுடன் அவர்களை கைது செய்ய வேண்டும்.