நெல்லையில் குடியரசு தினவிழா

நெல்லை, ஜன. 29: முன்னீர்பள்ளத்தில் குடியரசு தினவிழா ஊராட்சி தலைவர் உமா வெங்கடேஷ் மற்றும் செல்வகணபதி தலைமையில் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன், ஒன்றிய கவுன்சிலர் செல்வசங்கர் மற்றும் ஊர் பொதுமக்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் கணியான் கூத்து கலைஞர்கள் மாரியப்பன் குழுவினர் கொரோனா விழிப்புணர்வு மற்றும் குடியரசு தினத்தின் சிறப்பு குறித்து விளக்கப்பட்டது. பாளை தூய யோவான் கல்வியியல் கல்லூரியில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.

பேராசிரியை மெல்பா தாமஸ் வரவேற்றார். கல்லூரி தாளாளர் மோகன் ராஜ்குமார், தேசிய கொடியேற்றி சிறப்புரையாற்றினார். முதல்வர்(பொறுப்பு) ஆனந்தபாபு பேசினார். பேராசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் உறுதிமொழி ஏற்றனர். ஏற்பாடுகளை உடற்கல்வி பேராசிரியர் ஆல்வின் செய்திருந்தார். கொங்கந்தான்பாறையில் நடந்த குடியரசு   தின விழாவில்  கிராம ஊராட்சி தலைவி கலைச்செல்வி எபநேசர்  தேசிய கொடியேற்றி தூய்மை காவலர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.  நிகழ்ச்சியில் வார்டு   உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

Related Stories: