கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில்

கரூர், ஜன. 25: கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் குடியரசு தின விழாவினை முன்னிட்டு அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றது. கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ஜனவரி 26ம்தேதி அன்று குடியரசு தின விழா கொண்டாடப்படவுள்ளது. இந்த நிகழ்வின் போது, ஆயுதப்படை போலீசார்களின் அணிவகுப்பு நிகழ்வும் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வுக்கு பிறகு மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர், எஸ்பி சுந்தரவடிவேல் முன்னிலையில்  தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தவுள்ளனர். இதனை முன்னிட்டு கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் கடந்த சில நாட்களாக ஆயுதப்படை போலீசார்களின் அணி வகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.இதில், நூற்றுக்கணக்கான போலீசார் கலந்து கொண்டு குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சியை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: