ஆபாச பேச்சு வாலிபர் கைது

விருத்தாசலம், ஜன. 20: விருத்தாசலத்தில் ஆபாசமாக பேசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.விருத்தாசலம் சப்-இன்ஸ்பெக்டர் பரந்தாமன் மற்றும் போலீசார் நேற்று விருத்தாசலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பாலக்கரை பகுதியில், குப்பநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பாக்கியராஜ்(33) என்பவர் பொதுமக்களுக்கு இடையூறாக நின்று கொண்டு ஆபாசமாக பேசிக்கொண்டிருந்ததை போலீசார் கண்டித்துள்ளனர். ஆனால் மீறியும் அவர் ஆபாச பேச்சில் ஈடுபட்டதால் அவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: