திருப்பூர் குமரன் நினைவு தினம் அனுசரிப்பு

ராசிபுரம்: ராசிபுரம், வெண்ணந்தூர் பகுதியில் திருப்பூர் குமரன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. ராசிபுரம் அருகே வெண்ணந்தூரில் நகர காங்கிரஸ் சார்பில் திருப்பூர் குமரன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. நகர தலைவர் சிங்காரம் தலைமையில், திருப்பூர் குமரனின் திருவுருவ படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் நகர துணை தலைவர் தங்கமுத்து, ராஜேந்திரன், பாலமுருகன், சுகுமார், மோகன், முத்துசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  ராசிபுரம் கோல்டன் நற்பணி மன்றத்தின் சார்பில் திருப்பூர் குமரன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் குபேர் தாஸ் தலைமை வகித்தார். செயலாளர் இளங்கோ முன்னிலையில் திருப்பூர் குமரனின் படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தபட்டது. முன்னாள் நகரமன்ற உறுப்பினர் சுந்தரம், பூபதி, ஞானவேல், பிரபு, சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: