அரசு கல்லூரி அமையவிருக்கும் இடத்தை ஆட்சியர் ஆய்வு

காட்டுமன்னார்கோவில், ஜன. 11: காட்டுமன்னார்கோவில் அடுத்த குமராட்சி, கீழவன்னியூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்ட பரிந்துறைக்கப்பட்ட இடத்தை கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் மற்றும் கூடுதல் ஆட்சியர் ரஞ்சித்சிங் ஆகியோர் நேற்று பார்வையிட்டனர். அப்போது கோட்டாட்சியர் ரவி, காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர், ராமதாஸ், குமராட்சி ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்வாணன், வருவாய் ஆய்வாளர் கல்பனா, கிராம நிர்வாக அலுவலர் மணிமாறன், நில அலுவலர் பிரேம் ஆகியோர் உடன் இருந்தனர். அப்போது அந்த பகுதி கிராம ஊராட்சி மன்றத் தலைவர்கள் சமூகஆர்வலர்கள், பள்ளி மாணவிகள் உள்ளிட்டோர் கல்வியில் மிகவும் பின்தங்கிய பகுதியாக விளங்கும் குமராட்சி பகுதியிலேயே கல்லூரியை அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர்.

Related Stories: