நெய்வேலி டிஎஸ்பி அலுவலகத்தில் விழுப்புரம் சரக டிஐஜி ஆய்வு

நெய்வேலி, ஜன. 9:    நெய்வேலி நகர காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விழுப்புரம் சரக  டிஐஜி பாண்டியன் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது காவல் நிலையங்களில்  பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்தும் நிலுவையில் உள்ள வழக்குகள், கொலை,  கொள்ளை, வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்த விபரம், நீதிமன்றங்களில்  உள்ள வழக்குகள் குறித்து கேட்டறிந்தார்.

மேலும் நிலுவையில் உள்ள  வழக்குகளை விரைந்து முடிக்க காவல்துறை அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.  அப்போது நெய்வேலி காவல் துணை கண்காணிப்பாளர் ராஜேந்திரன், நெய்வேலி சப்  டிவிஷன் காவல் ஆய்வாளர்கள் சாகுல் ஹமீது, சியாம் சுந்தர், செல்வம், வீரமணி,  லதா, மலர்விழி, சுஜாதா மற்றும் காவல் துறையினர் உடனிருந்தனர். இதனை  தொடர்ந்து ஆய்வுக்கு பிறகு காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரில்  மரக்கன்றுகளை டிஐஜி நட்டார்.

Related Stories: