திருப்பூரில் கட்டிட கட்டுமான பொருட்கள் கண்காட்சி துவங்கியது

திருப்பூர், ஜன. 1: திருப்பூர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் நடத்தும் 16வது கட்டிட கட்டுமான பொருட்கள் கண்காட்சி, ‘கன்ஸ்ட்ரோ மெகா 21-22’ என்ற பெயரில், திருப்பூர் தாராபுரம் ரோடு, வித்யாகார்த்தி திருமண மண்டபத்தில் நேற்று (31ம் தேதி) காலை துவங்கியது. கண்காட்சி அரங்கை திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.செல்வராஜ் திறந்து வைத்தார். கண்காட்சி மலரை திருப்பூர் எம்.பி.சுப்பராயன் வெளியிட, கூட்டமைப்பின் முன்னாள் மாநில தலைவர் தில்லைராஜன் பெற்றுக்கொண்டார். சங்கத்தின் நாள்காட்டி மற்றும் நாள்குறிப்பை கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் சரவணன் வௌியிட சங்கத்தின் பட்டயத் தலைவர் சிதம்பரம் பெற்றுக்கொண்டார். தொடந்து நடந்த நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் முரளி தலைமை வகித்து பேசினார். சங்க செயலாளர் ஜனார்த்தனன் வரவேற்புரையாற்றினார்.

கண்காட்சித் தலைவர் பழனிசாமி கண்காட்சி குறித்து பேசினார். உடனடி முன்னாள் தலைவர் மணிகண்டன், கூட்டமைப்பின் மண்டலத் தலைவர் மோகன கண்ணன், சென்னை கார்த்திகேயன் அசோசியேட்ஸ் பொறியாளர் கார்த்திகேயன், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ம்.எல்.ஏ.செல்வராஜ், எம்.பி.சுப்பராயன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிறைவில் கண்காட்சி செயலாளர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில், திமுக மாநகர பொறுப்பாளர்கள் டி.கே.டி.மு.நாகராசன், தினேஷ்குமார், இந்திய கம்யூ., கட்சி ரவி, கட்டிட சங்க கண்காட்சி பொருளாளர் துரைசாமி, சங்க துணைத் தலைவர் ரமேஷ் என்கிற அருண், கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் ஸ்டாலின் பாரதி, துணைச்செயலாளர் பாரதிராஜா, துணை பொருளாளர் கார்த்திக், தகவல் தொடர்பாளர் கௌதம், கண்காட்சி மலர் குழு தலைவர் பிரகாஷ் மற்றும் கண்காட்சி குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கண்காட்சி ஜன.,3ம் தேதி வரை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும். அனுமதி இலவசம்.

Related Stories: