தெர்மல்நகரில் திருவிளக்கு பூஜை

தூத்துக்குடி, டிச.31: தூத்துக்குடி கேம்ப்-1 தெர்மல்நகர் ஐயப்ப சேவா பஜனை சங்கம் சார்பில் வரசித்தி விநாயகர், கிரஹஸ்தசாஸ்தா சுவாமி கோவிலில் திருவிளக்கு பூஜை வழிபாடுகள் நடந்தது. கணபதி ஹோமத்துடன் துவங்கிய வழிபாட்டில், பால்குடம் எடுத்து வருதலும், கிரஹஸ்த சாஸ்தாவுக்கு பால், இளநீர், சந்தனம், பன்னீர், நெய் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகம், அலங்காரமும், ஐயப்ப பக்தர்களின் பஜனை பாடல்களும் நடைபெற்றன. தொடர்ந்து மதியம் விநாயகர், சாஸ்தாவுக்கு அன்னதான பூஜையும், மாலை அகல் விளக்கேந்தி வீதிஉலா வருதலும், இரவு மஹா தீபாராதனையும் தொடர்ந்து,  திருவிளக்கு பூஜை, அஷ்டோத்திர அர்ச்சனை வழிபாடுகளும் நடந்தது. இதில், அனல்மின் நிலைய பணியாளர்கள், குடியிருப்பாளர்கள், ஐயப்ப பக்தர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

Related Stories: